அமெரிக்காவில் அதிகம் வசூலான தமிழ் திரைப்படம் என்ற பெயரை பெற்றது பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் அமெரிக்காவில் அதிகம் வசூலான தமிழ் திரைப்படம் என்ற பெயரை பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு அதன் வசூல், 46 கோடி ருபாய் என தெரிவித்துள்ளனர். இது,ரஜினிகாந்தின் எந்திரன் 2.0 படத்துக்கு வசூலான 45 கோடியே 38 லட்சம் ரூபாயை விட அதிகம் என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ள பொன்னியின் செல்வன் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவது குறிப்பிடத்தக்கது.
Comments