நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம்.. விதிமுறைப்படி நடந்ததா? என விளக்கம் கேட்கப்படும்- அமைச்சர்

0 3315

வாடகை தாய் மூலம் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை பெற்றெடுத்தது குறித்து, விளக்கம் கேட்கப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அமைச்சரிடம், நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணமாகி சுமார் 4 மாதங்களே ஆகும் நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற, விதிமுறை அனுமதிக்கிறதா ? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மருத்துவ சேவைத்துறை இயக்குநரிடம் தெரிவித்து, விதிமுறைப்படி இது நடந்ததா? என விளக்கம் கேட்கப்படும் என்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments