இந்தி மொழியை கட்டாயமாக புகுத்தி, இன்னொரு மொழிப் போரை திணிக்கக் கூடாது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்தி மொழியை கட்டாயமாக புகுத்தி, இன்னொரு மொழிப்போரை திணிக்கக் கூடாது என்று மத்திய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமமாக நடத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியை கட்டாயமாக்குவதை கைவிட்டு, இந்திய ஒற்றுமை சுடரை காத்திட வேண்டுமென பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்துவதாக முதலமைச்சர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Comments