நடிகை திவ்யாவின் மதமாற்ற புகாரை மடைமாற்றியது ஏன் ? காவல் ஆய்வாளருக்கு சிக்கல்
இந்துப் பெண்ணான திவ்யாவை மதமாற்றம் செய்து ஏமாற்றிய சீரியல் நடிகர் அர்னவ் மீது போலீசார் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யாததால், காவல் ஆய்வாளரை நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து மதமாற்றி திருமணம் செய்து கொண்ட செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் மீது மனைவியை அடித்து கொடுமைப் படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புகாரில் தன்னை மதம் மாற்றம் செய்து அர்னவ் என்கிற நைனாமுகமது ஏமாற்றியதாக திவ்யா கூறி இருந்த நிலையில் அது தொடர்பான வாசகங்களையும், சட்டப்பிரிவுகளையும், முதல் தகவல் அறிக்கையில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சேர்க்காமல் தவிர்த்த தோடு, கர்ப்பிணியான தன்னை எட்டி உதைத்து காயப்படுத்திய அர்னவ்வை கைது செய்யாமல் போலீசார் மெத்தனமாக இருப்பதாக, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் திவ்யா புகார் அளித்தார்.
மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம், தனக்கு நடந்த கொடுமைகள் குறித்தும் , அர்னவ் தனது வீடியோக்களை பொது வெளியில் வெளியிட்டு அவதூறு பரப்புவது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.
முதல் தகவல் அறிக்கையில், எஸ்.ஆர்.எம்.சி காவல் ஆய்வாளர் மதமாற்ற புகார் குறித்து எந்த ஒரு தகவலையும், சட்டப்பிரிவையும் வழக்கில் சேர்க்காதது ஏன் ? என்று காவல் உதவி ஆணையரை தொடர்பு கொண்டு மகளிர் ஆணைய தலைவி கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் இன்று மகளிர் ஆணையத்தில் ஆஜராகி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திவ்யா, போலீசார் நடவடிக்கை தாமதமாவதால் அர்னவ் தொடர்ந்து தன்னை பற்றியும், தனக்கு உதவுபவர்கள் குறித்தும் அவதூறு பரப்பி வருவதாகவும்,
மதமாற்ற புகார் தொடர்பாகவும், அர்னவ் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திவ்யா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்
Comments