பழிக்கு பழியாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பழிக்கு பழியாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அந்திவாடியை சேர்ந்த திமுக பிரமுகரான உதய்குமார் கடந்த பிப்ரவரி 28ந்தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் கொலையில் தொடர்புடைய முரளியை பெத்தக்கொள்ளு பகுதியில் மது அருந்த அழைத்துச் சென்ற உதயகுமாரின் நண்பர்கள் மதன் மற்றும் நவீன் ஆகியோர் பழிக்குப் பழியாக வீச்சரிவாளால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர்.
Comments