பேருந்து நிறுத்த நிழற்குடை மீது மோதி விபத்துக்குள்ளான தனியார் சொகுசு பேருந்து.. 30 பேர் படுகாயம்!

0 4113

மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, திண்டிவனம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த நிழற்கூடை மீது மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்து பயணிகள் 25 பேர், நிழற்குடையில் பேருந்துக்காக காத்திருந்த 5 பேர் என மொத்தம் 30 பேர் படுகாயமடைந்தனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னே சென்ற வாகனத்தை அந்த சொகுசு பேருந்து முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments