அந்தர் பல்டி அர்னவ்.. பக்கத்து அறையில் மனைவி இருக்க பாசாங்கு ஏன் ? போலீஸ் பிடியில் தப்பிக்க ஆக்டிங்

0 4511

கர்ப்பிணி மனைவியை அடித்து காயப்படுத்தியதாக சீரியல்  நடிகர் அர்னவ் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பக்கத்து அறையில் தங்கி உள்ள மனைவியுடன் சேர்ந்து வாழாமல், வழக்கை திசை திருப்பும் வகையில் மனைவிக்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அர்னவ் புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து மதமாற்றி திருமணம் செய்து கொண்ட செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் மீது மனைவியை அடித்து கொடுமைப் படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரே வீட்டில் , பக்கத்து அறையில் வசிக்கும் மனைவியை அடித்து காயப்படுத்திய வழக்கில் போலீசாரால் தேடப்படும் அர்னவ் திடீர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

அதில் குடும்ப சண்டையை அவருடன் இருப்பவர்கள் பெரிதாக்கி விட்டனர் என்றும் அவர்களிடம் இருந்து மனைவி குழந்தையை மீட்டுத்தரவேண்டும் என் மனைவியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும் , பிறக்க போகிற குழந்தையுடன் நான் இருக்க வேண்டும், என் மனைவிக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று கூறிய அர்னவ், என் குழந்தைக்கு ஏதாவது ஆனால் நண்பர் ஈஸ்வர், மனைவி திவ்யா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று அந்தர் பல்டி அடிக்கும் வகையில் தெரிவித்தார்

மனைவி நைட்டியுடன் வீட்டில் இருப்பதை வீடியோ எடுத்து பொது வெளியில் பரப்பிய யோக்கியர் அர்னவ் , வீட்டில் வைத்து தன்னை அடித்து எட்டி உதைத்ததில் தற்போது வரை தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த திவ்யா, அர்னவ் மற்றும் அவரது காதலி ஹன்சிதா அக்பர்ஷா ஆகியோரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மகளிர் ஆணையத்தில் விரிவான புகாராக அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பக்கத்து அறையில் இருக்கும் தன்னிடம் பேச மறுத்து , உதவும் நபர்கள் மீது பாய்வது ஏன் ? என்று கேள்வி எழுப்பிய திவ்யா, போலீசார் மதமாற்ற புகார் தொடர்பாக வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திவ்யா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments