யுவன் சங்கர் ராஜா கச்சேரிக்காக மாணவிகளை ஏறி மிதித்த கொடுமை..! 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

0 7157
யுவன் சங்கர் ராஜா கச்சேரிக்காக மாணவிகளை ஏறி மிதித்த கொடுமை..! 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவையில் காவல்துறையின் அனுமதியின்றி கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சிக்கி ஒரு பெண் உதவி ஆய்வாளர், 4 மாணவிகள் உள்ளிட்ட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இசையை ரசிக்கும் ஆர்வத்தால் சக மாணவிகளை மிதித்துச்சென்ற கொடுமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கோவை சின்னவேடம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள எஸ்.என்.எஸ். ராஜலெட்சுமி கலை அறிவியியல் கல்லூரியின் 25 வது ஆண்டு விழாவையொட்டி யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு பிளாக் சிப் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவை காணும் ஆவலில் முதலில் வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அந்த கல்லூரியின் கேட்டுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஏர்பட்ட தள்ளுமுள்ளுவில் கேட்டை தள்ளிக்கொண்டு மாணவர்கள் நுழைந்தபோது கூட்டத்திற்குள் ஐஸ்வர்யா, நந்தினி, ஹரினி ஆகிய 3 மாணவிகள் சிக்கினர்.

பெருங்கூட்டத்திற்குள் விழுந்த இவர்களை ஏறிமித்தபடி சென்றதால் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார் காயம் அடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது

மாணவர்களின் தள்ளு முள்ளால் கல்லூரி சுற்றுசுவர் உடைந்து விழும் நிலை ஏற்பட்டது, பேனர்கள் கிழிக்கப்பட்டது. மாணவர்கள் சிலர் கல்வீச்சிலும் ஈடுபட்டனர்

இதற்கிடையே போலீசார் பாதுகாப்புக்கு நின்ற போது யுவன் சங்கர் ராஜாவின் கார் வேகமாக உள்ளே நுழைந்த போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் காருக்கு பின்னால் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். அப்போது காவலுக்கு நின்ற பெண் உதவி ஆய்வாளர் பிளோமினா என்பவரை ஏறி மிதித்துச்சென்றதில் அவர் பலத்தகாயம் அடைந்தார்.

மேடையில் ஏறி யுவன் சங்கர் ராஜா பாட ஆரம்பித்ததும் எல்லோரும் தேசிய கீதம் பாடுவது போல சேர்ந்து பாடினர்

அப்போது உற்சாக மிகுதியால் அங்குமிங்கும் ஓடிய மாணவர்களின் அட்டகாசத்தால், யுவன் சங்கர்ராஜாவை காணவந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரும், லிபன்ராஜ் என்ற கல்லூரி மாணவரும் நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர்.

ஒட்டு மொத்தமாக 6 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் கல்லூரி வளாகத்திற்குள் நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் கல்லூரி நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததால் இந்த விபரீத சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments