கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஃபால்ஸ் சீலிங் பெயர்ந்து விழுந்தது..
சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஃபால்ஸ் சீலிங் பெயர்ந்து விழுந்தது.
அந்த மருத்துவமனையை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால், கட்டட விரிவாக்கம் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவமனையின் பி - பிளாக்கில் 3ஆவது தளத்தில், சீலிங்கை சரிசெய்ய டிரில்லிங் மெஷின் கொண்டு துளையிடும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அப்போது கான்கீரிட் கூரைக்கு கீழே குளிர்சாதன வசதிக்காக பொருத்தப்பட்டிருந்த பிளைவுட் திடீரென சாய்ந்தது.
இதனை கண்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், அறையை விட்டு உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Comments