மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடிகையை கர்ப்பிணியாக்கினாரா ஹீரோ..? ஆதாரத்தை வெளியிட்டு சிக்கினார்

0 4604

காதல் மனைவி திவ்யா மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் தெரிவித்திருந்த நிலையில் , மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணான திவ்யாவை அர்னவ் கர்ப்பிணியாக்கினாரா? என்று திவ்யா தரப்பில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

செவ்வந்தி சீரியல் நடிகை திய்வாயை காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கர்ப்பிணியானதும் கவிட்டதாக செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் மீது புகார் எழுந்தது. இரு தரப்பும் தொடர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுக்களையும் அதற்கு தகுந்த ஆதாரங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனது மனைவி திவ்யா மன நலம் பாதிக்கப்பட்டவர் என்ற புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அர்னவ், கடந்த ஜூலை மாதம் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்று மருந்துச்சீட்டுடன், திவ்யா வீட்டில் வைத்து தன்னுடன் வாக்குவாதம் செய்த வீடியோக்களை எடிட் செய்து வெளியிட்டார்

வீடியோவில் திவ்யா மன உளைச்சலில் பேசும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. பஞ்சு தலையனையால் மனைவி செல்லமாக தட்டியதை கூட செல்லம்மா ஹீரோ தன் மீது நடந்த தாக்குதல் என்று கூறுவது போன்ற காமெடி காட்சிகள் எல்லாம் அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தது

திவ்யாவை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று அர்னவ் கூறும் நிலையில் திவ்யா தரப்பில் இருந்து பல்வேறு சந்தேகங்களை அர்னவ்விடம் எழுப்பி உ ள்ளனர்.

ஜூலை 12 ந்தேதி மன நலம் பாதிக்கப்பட்டதற்கு திவ்யா சிகிச்சை எடுத்துக் கொண்டதாக அர்னவ் கூறும் நிலையில் , மனநலம் பாதிக்கப்பட்ட திவ்யா எப்படி கர்ப்பிணியானார் ? என்றும் அர்னவ் கூறுவது போல திவ்யா மன நிலை சரியில்லாமல் இருந்த போது பலாத்காரம் செய்யப்பட்டாரா ? என்றும் திவ்யா தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடந்த ஜூன் 27 ந்தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். 24 ந்தேதி காஞ்சிபுரம் ஸ்ரீசஸ்ய நாத சுவாமி கோவிலில் வைத்து திவ்யாவை, அர்னவ் திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்படி என்றால் அப்போது திவ்யா பூரண மன நலத்துடன் இருந்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் அர்னவ் கொடுத்த தொல்லைகளால் திவ்யா கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதற்கு அவர் அளித்த மருந்துச்சீட்டே சான்று என தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் மனைவி தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை கணவனிடம் பகிர்ந்து கொள்வதை கூட வீடியோவாக எடுத்து வைத்து அதனை கத்தரித்து பொது வெளியில் வெளியிட்டதன் மூலம் அர்னவ் என்ன மாதிரியான மன நிலையில் உள்ளார் என்பதை போலீசார் உணர்ந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள நடிகை திவ்யா இந்த சம்பவங்களில் முழு வீடியோக்களையும் அர்னவ்விடம் இருந்து கைப்பற்றி போலீசார் முழுமையாக விசாரித்து தனது வாழ்க்கைக்கு னியாயம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments