அரசு பணியிடங்களை நிரப்ப பிடிஓ-விடம் எம்எல்ஏ பிரின்ஸ் பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு - ஊராட்சி மன்ற தலைவர் வெளியிட்ட ஆடியோ..

0 2635

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலியாகவுள்ள 5 அரசு பணியிடங்களை நிரப்ப, குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேடி உதயம் ஆகியோர் பிடிஓ-விடம் பண பேரம் பேசுவதாக, கக்கோட்டுத்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் எம்எல்ஏ உள்ளிட்ட 2 பேரும் பேரம் பேசுவது, பெரும் கேவலமாக இருக்கிறது என ஊராட்சி மன்ற தலைவர் ஜெரால்ட் கென்னடி தெரிவிப்பது போல உள்ளது.

இதுகுறித்து எம்எல்ஏ பிரின்ஸ், கே.டி.உதயத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அடிப்படை ஆதாரமின்றி கென்னடி அவதூறாக ஆடியோ வெளியிட்டுள்ளதாகவும், சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments