130 சவரன் தங்கநகைகள் மாயமான வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது - 80 சவரன் நகைகள் மீட்பு..!

0 3206
130 சவரன் தங்கநகைகள் மாயமான வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது - 80 சவரன் நகைகள் மீட்பு..!

தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 சவரன் தங்க நகைகள் மாயமான வழக்கில் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்தையாபுரம் ஸ்பிக் நகரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞானகணேஷ் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நிதி நிறுவனம் சார்பில் நடைபெற்ற தணிக்கையில், 130 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது. 

நிதி நிறுவன சிறப்பு இயக்குநர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், கிளை மேலாளர் அருள் ஞானகணேஷை கைது செய்து 80 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments