மனைவி குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியது கணவரின் கடமை - உச்சநீதிமன்ற அமர்வு கருத்து
உடலில் வலிமை இருந்தால் ஒரு குடும்பத்தலைவர் கூலி வேலை செய்தாவது மனைவி, குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தன்னைச் சார்ந்துள்ள மனைவி மற்றும் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியது கணவரின் கடமை என்றும் நீதிபதிகள் ஒரு வழக்கில் தீர்ப்பின் போது கருத்து தெரிவித்துள்ளனர்.
கணவர் உடல் உழைப்பால் தமது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நிதி ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
Comments