லாலு பிரசாத், ராப்ரி தேவி உள்ளிட்ட 13 பேர் மீது ஊழல் புகார் - சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!

0 3130
லாலு பிரசாத், ராப்ரி தேவி உள்ளிட்ட 13 பேர் மீது ஊழல் புகார் - சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!

ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வேலை வாய்ப்பில் முறைகேடுகள் செய்ததாக சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி உள்ளிட்ட 13 பேர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

ரயில்வே வேலைக்கு மாற்றாக குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கிக்கொண்டு ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து லாலு பிரசாத் ஊழலில் ஈடுபட்டதாக சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி நியமனம் பெற்றவர்களை தேர்வு செய்ததில், லாலு மகன் தேஜஸ்விக்கு முக்கிய பங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments