பயிற்சியின்போது டி - 90 ரக பீரங்கியின் பேரல் வெடித்து விபத்து - 2 வீரர்கள் உயிரிழப்பு..

0 3054

உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்சி அருகே பயிற்சியின்போது டி - 90 ரக பீரங்கியின் பேரல் வெடித்து விபத்திற்குள்ளானதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பாபினா என்ற இடத்தில் நேற்றிரவு பீரங்கியில் 3 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென அதன் பேரல் பகுதி வெடித்ததில் அதில் இருந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

காயமடைந்த மற்றொரு வீரருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments