36 செயற்கைகோள்களை மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவும் இஸ்ரோ..!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வணிக ரீதியில் மார்க் 3 ராக்கெட் மூலம் இங்கிலாந்தின் ஒன் வெப் நிறுவனத்தின் 6 டன் எடையிலான 36 செயற்கை கோள்களை, விண்ணில் ஏவ உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒன் வெப் இந்தியா திட்டத்தின் கீழ், இங்கிலாந்தின் ஒன் வெப் நிறுவனத்தின் 6 டன் எடையிலான 36 செயற்கைகோள்களை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இம்மாதத்தின் 3-வது அல்லது 4-வது வாரத்தில் இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது.
குறைந்த புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைகோள்கள், லண்டனில் உள்ள நிறுவனங்களுக்கு தகவல் தொடர்பு சேவைகளை வழங்க பயன்படவுள்ளன.
Comments