அணுஆயுத மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர் புடின் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம்..!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்துள்ள அணுஆயுத மிரட்டல், ஆக்க சக்திகளுக்கும், அழிவு சக்திகளுக்கும் இடையிலான இறுதிகட்ட போர் அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க நினைத்தால் அணுஆயுதத்தையும் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று அண்மையில் ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் பைடன், 1962 ஆண்டு நிகழ்ந்த கென்னடி மற்றும் கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு பிறகு உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மனிதகுல பேரழிவுக்கான அச்சுறுத்தல் இது என்று குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ள ரஷ்ய அதிபர் புடினின் சரிவுப்பாதையை கண்டுபிடிக்க தாம் முயலுவதாகவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Comments