டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர் ..!
சென்னை தேனாம்பேட்டையில், டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிவிட்டு தப்பி சென்ற டீ மாஸ்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
போயஸ் சாலையில் உள்ள அருண் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் 2 ஆண்டுகளாக பெரியாண்டி என்பவர் டீ மாஸ்டராக வேலை செய்து வந்த நிலையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் டீ மாஸ்டரை வேலைவிட்டுச் செல்லும்படி அருண் கூறியதால் கோபமடைந்த பெரியாண்டி, ஆத்திரத்தில் டீக்கடையில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்து அருண் மீது ஊற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்.
படுகாயமடைந்த அருண், 30% தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments