கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளிக்குள் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளில் பள்ளி மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Comments