22 மொழிகளில் நில ஆவணங்களை மொழிபெயர்க்க மத்திய அரசு திட்டம்
அந்தந்த மாநில மொழிகளில் எழுதப்படும் நில ஆவணங்களை ஆங்கிலம், ஹிந்தி உட்பட 22 மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.
தமிழகம், மகாராஷ்டிரம், பீகார், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட 8 மாநிலங்களில் சோதனை முறையில் இத்திட்டத்தை தொடங்கி உள்ளதாகவும், இதற்காக புதிய மென்பொருள் 11 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் நில வளத்துறை இணை செயலாளர் சோன்மோனி போரா தெரிவித்துள்ளார்.
இதனால் பத்திரப் பதிவுத்துறையில் நிலவும் மொழித் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments