தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தந்தையும் தற்கொலை

0 3364
தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தந்தையும் தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, செல்போனில் அதிகநேரம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.

பழந்தண்டலம் பகுதியை சேர்ந்த நவீன்குமார், பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், செல்போனில் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக நிலையில் அவரது தந்தை சுந்தர் கண்டித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மன்முடைந்த நவீன் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை நவீன் குமார் தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரது உறவினர்கள் வந்து நவீன் குமார் உடலை மீட்டு அழுது கொண்டிருந்த நிலையில் தன்னால் தனது மகன் இறந்து விட்டானே என்ற சோகத்தில் சுந்தர் கத்தியால் தனது கையை அறுத்து கொண்டு அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments