இங்கிலாந்தின் மன்னராக அடுத்தாண்டு சார்லஸ்சுக்கு முறைப்படி முடிசூட்டு விழா

0 2784
இங்கிலாந்தின் மன்னராக அடுத்தாண்டு சார்லஸ்சுக்கு முறைப்படி முடிசூட்டு விழா

இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ்சுக்கு முறைப்படி முடிசூட்டு விழா அடுத்தாண்டு ஜுன் 3ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த மாதம் இறந்ததையடுத்து மன்னராக பொறுப்பேற்றுக்கொண்ட சார்லஸ்சுக்கு அந்நாட்டு மரபுப்படி முடிசூட்டு விழா இன்னும் நடைபெறவில்லை.

ராணி எலிசபெத்துக்கு 70 ஆண்டுகளுக்கு முன் நடந்த முடிசூட்டு விழாவைப் போன்று பிரமாண்டமாக இல்லாமல் சிறிய அளவில் சார்லஸ்சின் முடிசூட்டும் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

74 வயதான சார்லஸ், இங்கிலாந்து வரலாற்றில் வயதான மன்னராக முடிசூட்டிக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments