வியாழனின் நிலவான யூரோப்பாவில் கடல் கண்டுபிடிப்பு... யூரோப்பா மேற்பரப்பில் எடுத்த படத்தை வெளியிட்ட நாசா
வியாழனின் நிலவான யூரோப்பாவில் பூமியில் உள்ள கடல்களை விட அதிக நீர் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது.
யூரோபா சூரிய மண்டலத்தின் ஆறாவது பெரிய நிலவு ஆகும். இந்த நிலவில் ஒரு மைல் தடிமன் அளவிற்கு உள்ள பனிகட்டிக்கு கீழே உப்பு நிறைந்த கடல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வியாழன் கோளின் மேற்பரப்பின் மேலே வட்டமிட்ட ஜுனோ விண்கலம் நீர் நிறைந்த பகுதிகளை மிக தெளிவான காட்சிகளுடன் படம் பிடித்துள்ளது.
உலகெங்கும் உள்ள வானவிலாளர்களின் ஆர்வத்தை தூண்டும்படியாக அந்தப் படம் வெளியாகி உள்ளது. நாசாவால் வெளியிடப்பட்ட படம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 150 கிலோ மீட்டரிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments