காதலித்து மதம் மாற்றி சீரியல் நடிகையை கர்ப்பிணியாக்கிய நாயகன்..! அரசு மருத்துவமனையில் சிகிச்சை

0 8027
காதலித்து மதம் மாற்றி சீரியல் நடிகையை கர்ப்பிணியாக்கிய நாயகன்..! அரசு மருத்துவமனையில் சிகிச்சை

செவ்வந்தி சீரியல் நடிகையை காதலித்து மதம் மாற்றம் செய்து திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை நடிகர் ஒருவர், கைவிட்டு சென்றதால் , 3 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த நடிகை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சேக் அப்துல்லா என்பவரின் மகன் நைனாமுகமது. இவர் தனது பெயரை அர்னாவ் என்று மாற்றிக் கொண்டு பல்வேறு டி.வி.சீரியல்களில் நடித்து வந்தார்.

அர்னாவுக்கு, செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவுடன் காதல் மலர்ந்தது. திவ்யாவை விரட்டி விரட்டி காதலித்த அர்னாவ் ஒரு கட்டத்தில் மதம் மாறினால் தான் வீட்டில் திருமணத்துக்கு சம்மதிப்பார்கள் என்று கூறி நிபந்தனை விதிக்க , கண்ணாளனே கண்கண்ட தெய்வம் என்று திவ்யா கடந்த பிப்ரவரி மாதம் தன்னை முறைப்படி இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக் கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக அவர்கள் இஸ்லாம் முறைப்படி திருமணமும் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர். திருமண விவகாரம் வெளியில் தெரியாமல் ரகசியமாக இருக்கட்டும் என்ற அர்னாவ் ஒரு கட்டத்தில் வேறு சின்னத்திரை நடிகையுடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட திவ்யா தனக்கு ஊரறியத் தாலிக்கட்டச் சொல்லி வற்புறுத்திய நிலையில், வேறு வழியின்றி 3 மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசஸ்யநாதா கோவிலில் வைத்து நண்பர்கள் புடை சூழ இந்து முறைப்படியும் திருமணம் செய்துள்ளார்

திருமனம் முடிந்த சில வாரங்களில் அர்னவ் மீண்டும் திவ்யாவை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

தற்போது கர்ப்பிணியாக உள்ள திவ்யா, திடீர் உடல் நலக்குறைவால், கவனித்துக் கொள்ள ஆள் இல்லாத நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வயிற்றில் உள்ள சிசுவுடன் கண்ணீரில் தவிக்கும் திய்வா, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

அதில், கர்நாடகாவை சேர்ந்து இந்து பெண்ணான தன்னை, நைனாமுகமது என்கிற அர்னவ் உருக உருக காதலித்து மயக்கி, திட்டமிட்டு மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கர்ப்பிணியானதும் தன்னை தவிக்கவிட்டு, அவரது மதத்தை சேர்ந்த ஹன்சிகா என்ற சீரியல் நடிகையுடன் சென்று விட்டதாக குற்றம் சாட்டினார். தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், தனது உயிருக்கும் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு முழு பொறுப்பு அர்னவ் தான் என்பதை அவரது வழக்கறிஞர் மூலம் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே திவ்யாவுக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் முயன்றதாக கூறி அவரது வழக்கறிஞர் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எற்பட்டது. இது குறித்து காவல் ஆணையரிடம் முறையிட உள்ளதாக திவ்யாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments