ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றக் கூட்டத்தில் தலைமுடியை வெட்டியெறிந்த பெண்
ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஆதரித்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய யூனியன் எம்பி. அபிர் அல் சாஹியானி தமது தலைமுடியை வெட்டி வீசி எறிந்தார்.
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றக் கூட்டத்தின் இடையே பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற விவாதத்தின் போது, ஈரானில் ஆண், பெண் ஆகிய இருதரப்பினருக்கும் எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி அந்தப் பெண் அரசியல்வாதி தமது கூந்தலை கத்திரியால் வெட்டி எறிந்தார்.
ஈரான் முழு சுதந்திரம் அடையும் வரை அதற்கு ஆதரவாக இருப்போம் என்று அந்தப் பெண் எம்.பி.அறிவித்தார்.
Comments