சுங்க கட்டணம் வசூலித்ததில் ரூ. 6 ஆயிரம் கோடி முறைகேடு - மணீஷ் சிசோடியா..!
டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலித்ததில் 6 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி துணைநிலை ஆளுநர் சக்சேனாவுக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு எம்சிடி ஊழல் குறித்து அளித்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பொதுப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு எதிராக முறைகேடு செய்ததாகக் கூறி போலி வழக்குகள் போடப்படுகின்றன என்றும் மணிஷ் சிசோடியா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Comments