சிவசேனா கட்சி தனிநபர் நிறுவனம் அல்ல.. உத்தவ் தாக்கரே மீது ஏக்நாத் ஷிண்டே கடும் விமர்சனம்
சிவசேனா கட்சி தனிநபர் நிறுவனம் அல்ல என்று உத்தவ் தாக்கரே மீது மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடும் விமர்சனம் வைத்தார்.
ஷிண்டேவை ராவணனாக வர்ணித்து நம்பிக்கை துரோகம் செய்ததாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய ஷிண்டே, பால் தாக்கரேவால் உருவான சிவசேனா தனியார் நிறுவனமா என்று உத்தவ் தாக்கரேவுக்கு கேள்வி எழுப்பினார்.
இந்தக் கட்சிக்காக வேர்வை சிந்திய தொண்டர்களுக்கு சொந்தமான இயக்கம் இது என்று கூறிய ஷிண்டே, இந்தக் கட்சியை விற்றுவிட்டதாக உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்தார்.
Comments