குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை ஓட்டி மகிசாசூரசம்ஹாரம்..!
குலசேகரபட்டினத்தல் தசரா திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு கோலத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைக்குப் பின் மஹிஷா சூரமர்தினி கோலத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு வந்தார். முதலில் தன் முகத்துடன் இருந்த மஹிஷாசூரனை அம்மன் வதம் செய்த பின்னர் சிங்கமுகமாக உருவம் பெற்றவனையும் வதம் செய்தார்.
தொடர்ந்து எருமை முகம் பெற்ற சூயனையும், முடிவில் சேவல் உருவமாக மாறிய மஹிசாசூரனையும் அம்மன் வதம் செய்தார். இதில் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஓம் காளி, ஜெய் காளி என்ற முழக்கமிட்டு அம்மனை வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டி காளி, அம்மன், ராஜா, ராணி, குறவன், குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து வீடு வீடாக சென்று பெற்ற காணிக்கையை கோவிலில் செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
Comments