விஜயதசமி கொண்டாட்டம்.. குழந்தைகளுக்கு வித்யாரம்பம்..!
நவராத்திரி பண்டிகை நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் விஜயதசமி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. கல்வி, கலைகள், தொழில்களைத் தொடங்க உகந்தநாளாக கருதப்படும் விஜயதசமி நாளான இன்று, வழிபாட்டு தலங்களில் குழந்தைகளின் கல்வியை துவங்கும் வித்யாரம்பம் முன்னெடுக்கப்பட்டது.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குனர் காமகோடி, பாடகி பி.சுசீலா ஆகியோர் குழந்தைகளின் கையை பிடித்து நெல் மணிகளில் தமிழ் உயிரெழுத்துகளை எழுத வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள வனமாலீஸ்வரர் சரஸ்தேவி கோவிலில் வித்யாரம்பம் என்னும் கல்வி தொடங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குழந்தைகளின் கல்வியை துவங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று குழந்தைகளை நெல்மணிகளில் எழுத வைத்து கல்வியை தொடங்கி வைத்தனர்.
சேலம் குரங்குசாவடியிலுள்ள ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், ஏராளமான பொற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
Comments