உத்தரகாண்ட் மாநிலத்தின் பனிமலைகளில் மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழந்தது உறுதி..மத்திய அமைச்சர் இரங்கல்

0 2393

உத்தரகாண்ட் மாநிலத்தின் பனிமலைகளில் மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

41 பேர் கொண்ட மலையேற்ற வீரர்கள் குழு ஒன்று திரௌபதி கா காண்டா என்ற பனிமலைச்சிகரத்தில் 17 ஆயிரம் அடி உயரத்தில் பயிற்சியில் ஈடுட்டிருந்தது.

அப்போது பனிச்சரிவு ஏற்பட்டதில் வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments