லடாக் எல்லையில் அத்துமீறும் சீன ஜெட் விமானங்கள் கண்காணிப்பு - ஏர் மார்ஷல் சவுத்ரி
லடாக் எல்லையில் சீன விமானங்கள் எல்லைத் தாண்டி அத்துமீறுவதைத் தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருவதாக விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்திரி தெரிவித்துள்ளார்.
இதற்காக ஏராளமான ராடார் உள்ளிட்ட தற்காப்பு சாதனங்களை எல்லையில் விமானப்படை குவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விமானப்படை தினத்தையொட்டி செய்தியாளர்களை சந்தித்த சவுத்திரி, சீன ஜெட் விமானம் ஒன்று எல்லைத் தாண்டி பறந்து வந்ததாகவும் இந்திய போர் விமானங்கள் தயார்நிலையில் தாக்குதல் நடத்த இருந்ததால் சில நிமிடங்களில் பின்வாங்கியதாகவும் தெரிவித்தார்.
வான்வெளியில் சீனா விதிமுறைகளை மீறினால் ராணுவத்தின் நேரடித் தொலைபேசி சேவையின் மூலம் சீன அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்படும் என்றும் சவுத்திரி தெரிவித்தார்.
Comments