JEE நுழைவுத்தேர்வில், 820 தேர்வர்களுக்கு மோசடி செய்து உதவிய ரஷ்ய ஹேக்கர் கைது..!
நாட்டின் முக்கிய தேர்வுகளில் ஒன்றான JEE நுழைவுத்தேர்வில், ரஷ்ய ஹேக்கர் 820 தேர்வர்களுக்கு மோசடி செய்து உதவியதாக சிபிஐ குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
ஐஐடி உள்பட முக்கிய கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வதற்காக நடத்தப்படும் JEE நுழைவுத்தேர்வின் மென்பொருள் அமைப்பை (iLeon software) ஹேக் செய்து மோசடி செய்ததாக ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் ஷார்கின் (Mikhail Shargin) என்பவரை, டெல்லியில் சிபிஐ கைது செய்தது.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி மிகைல் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக சிபிஐ தெரிவித்தது. இந்நிலையில், மிகைலுக்கு இரண்டு நாள் சிபிஐ காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments