சென்னை, கொடுங்கையூரில் ரசாயன நிறுவனத்தில் வாயுக்கசிவு..

0 2451

சென்னை கொடுங்கையூரில் ரசாயன நிறுவனத்தில் வாயுக்கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெங்கடேசன் என்பவர் காலணிகளை ஒட்ட பயன்படுத்தப்படும் திரவத்தை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நேற்றிரவு, அங்கு ரசாயனம் இருந்த டிரம்மின் மூடியில் உடைப்பு ஏற்பட்டதில் அதிலிருந்த திரவம் வாயுவுடன் வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

இதனால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் மயங்கிய நிலையில், அவர்களை மீட்கச் சென்ற சுரேஷ் என்பவரும் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments