முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!
சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடமாக இருப்பதாக, குர்கான் மேதந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
82 வயதான முலாயம்சிங் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு நேற்று மாற்றப்பட்டார். இந்நிலையில், முலாயம்சிங் யாதவ் கவலைக்கிடமாக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments