3 - 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் ஊதா நிற மலர்கள் - அட்டகாமா பாலைவனம்..!

0 2601

சிலி நாட்டில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் தேசிய பூங்கா அமைக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அறிவித்துள்ளார்.

உலகின் மிக வறண்ட பாலைவனமான அட்டகாமாவில், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஊதா நிறத்திலான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்யும் போது பாலைவனத்தில் இது போன்று பூக்கள் பூக்கும் நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும் அப்பகுதியை பாதுகாக்கும் விதமாகவும் அங்கு பூங்கா அமைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments