கூடலூர் அருகே பன்றியை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட சுருக்குக் கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு

0 2531

கூடலூர் அருகே பன்றியை பிடிக்க வைத்த சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு முதுமலை புலிகள் வனக்காப்பகத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.

பந்தலூர் எருமாடு பகுதியில் தனியார் தோட்டத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட 3 வயது பெண் சிறுத்தைக்கு வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து சென்ற மருத்துவக் குழுவினர் அதிநவீன சிகிச்சையை அளித்தனர்.

சிறுத்தை உயிரிழந்ததையடுத்து தோட்ட உரிமையாளர்கள் அனீஸ் மற்றும் ராஜன் மேத்யூ ஆகியோர் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments