உணவு நெருக்கடியை சமாளிக்க 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம் - ஐ.எம்.எஃப்
உலகளாவிய உணவு நெருக்கடியை சமாளிக்க ஆப்பிரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, வளைகுடா நாடுகளில் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உலகளவில் 48 நாடுகளில் பாதி நாடுகளில் கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர் என்றும், இந்த நிலைமையை எளிதாக்கும் வகையில் உணவு வர்த்தக கட்டுப்பாடுகளை எதிர்த்து சர்வதேச நாணய நிதியம் குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
Comments