சுங்கச்சாவடி ஊழியர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் : சுங்கக் கட்டணம் இன்றிக் கடக்கும் வாகனங்கள்..!
சென்னை- திருச்சி நான்கு வழி சாலை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 93 தொழிலாளர்கள் கடந்த 13 ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில் முதல் கட்டமாக 28 தொழிலாளர்களை கடந்த ஒன்றாம் தேதி நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை ஒட்டி பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தீவிர படுத்த முடிவு செய்தனர் இதனை அடுத்து அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
Comments