பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசம் செய்த பிரபல யூடியூபருக்கு நீதிபதி வழங்கிய நூதன தண்டனை

0 3120

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசம் செய்த பிரபல யூடியூபருக்கு நீதிபதி நூதன முறையில் தண்டனை வழங்கினார்.

கடந்த மாதம் அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஒருவரின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ஆம்பூரைச் சேர்ந்த ஹாரிஸ் மற்றும் முகமது சைபான் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பிரபல யூடியூபரான கோட்லா அலெக்ஸ் பினோய் வாகனத்தை ஓட்டி சென்றது தெரியவந்தது.

தலைமறைவான பினாய் முன் ஜாமீன் கேட்டதையடுத்து பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 3 வாரங்களுக்கு திங்கட்கிழமை தோறும் காலை, மாலை ஒரு மணி நேரம் பிரசுரங்களை வழங்கவும், அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றவும் நூதன தண்டனை கொடுத்து நீதிபதி முன்ஜாமீன் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments