சுவீடனைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ என்பவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ (Svante Paabo) என்ற விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அழிந்து போன மனித இனமான ஹோமினின்களின் மரபணு மற்றும் மனிதர்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஆராய்ச்சிக்காக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்த நோபல் பரிசு குழுவினர், ஹோமினின்களுக்கும், தற்போதைய மனிதர்களுக்கும் இடையிலான மரபணு வித்தியாசத்தையும் ஸ்வந்தே தனது சிறப்பான ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Comments