6ஆம் வகுப்பு மாணவனுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை கொடுத்த சகபள்ளி மாணவன்-2 சிறுநீரகங்களும் செயலிழந்ததாக தகவல்
கன்னியாக்குமரி மாவட்டத்தில் 6 வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிட் கலந்த குளிர்பானத்தை அருந்தியதால், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மெதுகும்மல் பகுதியை சேர்ந்த சுனில் என்பவரின் 11 வயது மகன் அஸ்வின், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 24 ம் தேதி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் அஸ்வினுக்கு அதே பள்ளி சீருடையில் வந்த மற்றொரு மாணவன் குளிர்பானம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த குளிர்பானத்தை அருந்திய அஸ்வினுக்கு இரவில் குளிர்காய்ச்சலும், வாய் மற்றும் நாக்கில் புண்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டத்தில் அஸ்வின் அருந்திய குளிர் பானத்தில் ஆசிட் கலக்கப்பட்டிருந்ததும், அஸ்வினின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இருப்பதும் கண்டறியப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அஸ்வினுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அஸ்வினுக்கு குளிர்பானம் கொடுத்தது யார் என்பதை கண்டுபிடிக்க சிசி டிவி காட்சிகளை கேட்டால், பள்ளி நிர்வாகம் இழுத்தடிப்பதாக, அஸ்வினின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Comments