தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் மாயம்-பூண்டி மாதா கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது விபரீதம்

0 3143

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூண்டி மாதா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமான நிலையில், இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

தூத்துக்குடியில் இருந்து பேருந்து மூலம் சுற்றுலா வந்த 40 பேர், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் சாமி தரிசனம் செய்த நிலையில், அவர்களில் 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது மணல் அள்ளிய பள்ளத்தில் தேங்கிச் சென்ற தண்ணீரில் 6 பேரும் மூழ்கி மாயமாகினர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், சார்லஸ், பிரவீன்ராஜ் ஆகியோரது உடல்களை மீட்டனர். மற்ற 4 பேரின் உடல்களை படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments