விமானப்படையில் இணைக்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு இலகுரக ஹெலிகாப்டர்கள்
இந்திய விமானப்படைக்கு மேலும் வலுவூட்டும் வகையில், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதி நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் இன்று விமானப்படையில் இணைக்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த இலகு ரக ஹெலிகாப்டர்களை விமானப்படையுடன் இணைத்தார். பிரச்சாந்த் என்று இந்த ஹெலிகாப்டர்களுக்கு பெயரிடப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப்பகுதிகளுக்கு அதி நவீன ஆயுதங்களுடன் துரிதமாக சென்று இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தது இந்த ஹெலிகாப்டர்கள் என்று கூறினார்.
நவீன ரக துருவ் ரக ஹெலிகாப்டர்கள் போன்று கவச பாதுகாப்பு கொண்ட இந்த இலகுரக ஹெலிகாப்டர்கள் உயரமான இடங்களில் உள்ள பதுங்கு குழிகளை அழிக்கவும், காடுகளில் ஊடுருவல் முயற்சிகளை தடுக்கவும், தரைப்படைகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
नाम है ‘प्रचंड’ pic.twitter.com/dCa3WGvw9A
Comments