போதை ஊசி, கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது.. எஸ்.பி.யின் உத்தரவை அடுத்து தனிப்படை போலீசார் அதிரடி!

0 2498

திண்டிவனம் பகுதிகளில் போதை ஊசி, கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனம் பெலா குப்பம் ரோடு வசந்தபுரம் பகுதிகளில் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் சதாம் என்பவர் வீட்டில் போதை ஊசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்த போலீசார் போதை ஊசி தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 7 குளுகோஸ் பாட்டில்கள், 160 போதை மாத்திரைகள், 10 ஊசியுடன் கூடிய சிரஞ்ஜிகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் சதாம் அளித்த தகவலின் பேரில் சூர்யா, ஷாம், சிவா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், கஞ்சா வைத்திருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த கவுதம், யுவராஜிடமிருந்து தலா 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments