ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி!

0 3635

மெக்சிகோவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். 

அந்நாட்டின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தபாஸ்கோ அருகே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்ற 2 வீரர்களை மீட்பு குழுவினர் மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments