சீனாவில் களைகட்டிய தேசிய தினக் கொண்டாட்டம்.. தேசியக் கொடியை ஏந்தி மகிழ்ச்சியுடன் நடனமாடிய மக்கள்..!
'சீன மக்கள் குடியரசு' தோற்றுவிக்கப்பட்டதன் 73-ஆம் ஆண்டு விழா சீனாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அமைந்த தினம் அந்நாட்டில் தேசிய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை மக்கள் கண்டு ரசிக்கின்றனர்.
கட்டிடங்கள் வண்ண விளக்குகளில் ஜொலித்தன. வானை அலங்கரித்த ட்ரோன்களின் பல வண்ண ஒளி அலங்காரம் கவனத்தை ஈர்த்தது. டியாஞ்சி ஏரியின் கரையில் அந்நாட்டின் தேசியக் கொடியை ஏந்தி மக்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடினர்.
சின்சியாங் நகரின் தைஹாங் மலைகளில், பிரகாசமான ஐந்து நட்சத்திர சிவப்புக் கொடிகள் காற்றில் பறக்கின்றன.
Comments