சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம்சிங் யாதவின் உடல் நலம் பாதிப்பு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

0 2511

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம்சிங் யாதவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து ஹரியானாவின் குருகிராமில் உள்ள மெடன்தா மருத்துவமனையின் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது மகனும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் மருத்துவமனை சென்று முலாயம்சிங்கின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனிடையே பிரதமர் மோடி அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முலாயம்சிங் யாதவின் உடல்  நலம் குறித்து விசாரித்தார். தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத்தயார் என்று அகிலேஷிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments