ராஜராஜ சோழனை சினிமாவில் இந்து அரசனாக காட்டுவதா ? வெற்றிமாறன் என்ன சொல்ல வருகிறார்
திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குனர் வெற்றி மாறன் , திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக அடையாளப் படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் பங்கேற்று பேசினார்.
அசுரன் படம் எடுப்பதற்கு முன்பாக, என்ன மாதிரி எடுப்பது ? என்று திருமாவளவனை சந்தித்து ஆலோசனை பெற்றதாக தெரிவித்தார்.
கலை என்பதே அரசியல் என்றும், கலை அவர்கள் கரங்களில் இருந்து திராவிடர்கள் கைகளுக்கு வந்த பின்னர் தான் மக்களுக்கானதாக மாறியதாகவும் குறிப்பிட்ட வெற்றிமாறன், திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக அடையாளப் படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் நமது அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது சினிமாவிலும் நடக்கிறது, நாம் அடையாளங்களை காக்க வேண்டும் என்றார்
Comments