மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தால் அசாதாரண சூழல்.. மத்திய துணை ராணுவப் படையினர் புதுச்சேரிக்கு விரைவு..!
மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், மத்திய துணை ராணுவப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
மின்துறை தனியார்மயமாவதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரியில் மின் தடை ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்களும் போராட்டதில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தொடர் போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் செயற்கையாக மின் வெட்டை ஏற்படுத்துவோர் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்வெட்டு ஏற்படுத்திய ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
Comments