விமானப்படையில் இலகுரக ஹெலிகாப்டர்கள்.. இரவு நேரத்திலும் தாக்குதல் நடத்தும் வல்லமை..!
விமானப்படையின் திறனை மேலும் வலுவூட்டும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் இன்று விமானப்படையில் இணைக்கப்பட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்பணித்தார்.
இந்திய விமானப்படைக்கு 10, ராணுவத்திற்கு 5 என மொத்தம் 15 இலகுரக ஹெலிகாப்டர்களை 3887 கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி இதன் முதல் தொகுப்பு இன்று விமானப்படையுடன் இணைக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த இலகு ரக ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். விமானப்டை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌத்திரி மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர். பிரச்சாந்த் என்று இந்த ஹெலிகாப்டர்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப்பகுதிகளுக்கு அதி நவீன ஆயுதங்களுடன் துரிதமாக சென்று இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தது இந்த ஹெலிகாப்டர்கள் என்று கூறினார்.
இதன் பின்னர் அமைச்சர் ராஜ்சிங், இலகுரக ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு மேற்கொண்டார்
நவீன ரக துருவ் ரக ஹெலிகாப்டர்கள் போன்று கவச பாதுகாப்பு கொண்ட இந்த இலகுரக ஹெலிகாப்டர்களை அனைத்து காலநிலைகளிலும் இயக்க முடியும். இரவு நேரத்திலும் இதனால் எதிரிகளின் நிலை மீது துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். ட்ரோன்களையும் தாக்கி அழிக்கும் திறன் படைத்த இந்த ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நன்றாக பயன்படுத்த முடியும்.b
Comments